பிரான்ஸ் – அமெரிக்க நட்பு வாடிப்போனது!

வெள்ளை மாளிகையில் நடப்பட்ட பிரான்ஸ் – அமெரிக்கா நட்பு மரம் வாடியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அமெரிக்கா மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகளுக்கு இடையிலான 250 ஆண்டுகால நட்புறவை கொண்டாடும் வகையில் பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் வொஷிங்டனுக்கு சென்றிருந்தார்.

இதன்போது இருநாடுகளுக்கு இடையிலான வலிமையான நட்பை நினைவுகூரும் விதமாக வெள்ளை மாளிகையின் தெற்கு பகுதியில் டொனால்ட் டிரம்ப் – இம்மானுவேல் மக்ரோன் ஆகியோர் ஒன்றாக இணைந்து ஒரு கருவாலி மரக்கன்றை நட்டனர்.

‘அமெரிக்கா – பிரான்ஸ் நட்பு மரம்’ என அழைக்கப்பட்ட குறித்த மரம்நடுவிழா சர்வதேச ஊடகங்களில் மிக முக்கிய செய்தியாக வெளியானது.

இந்நிலையில், குறித்த நட்பு மரம் தற்போது வாடியுள்ளதாக அமெரிக்க ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இதற்கு வெள்ளை மாளிகை அதிகாரிகளின் மிதமிஞ்சிய கட்டுப்பாடுதான் காரணம் என கூறப்படுகிறது.

பிரான்ஸிலிருந்து இருந்து கொண்டு வரப்பட்ட குறித்த மரக்கன்றினால் வெள்ளை மாளிகை தோட்டத்திலுள்ள ஏனைய செடி வகைகளுக்கு எந்த பாதிப்பும் ஏற்படக் கூடாது என்ற நோக்கத்தில் நட்பு மரத்தின் மீது அதிகாரிகள் சில தெளிப்பான்களை தொடர்ந்து பயன்படுத்தியதால் அந்த மரம் வாடியிருக்கலாம் என்று கூறப்படுகின்றது.


Recommended For You

About the Author: Editor