வவுனியாவில் யுவதியுடன் தவறாக நடக்க முற்பட்ட வர்த்தகர் கைது!!

வவுனியாவில் பிரபல முஸ்லிம் வர்த்தகர் ஒருவர் தமிழ் யுவதியொருவருடன் தவறாக நடக்க முற்பட்ட வேளை பூவரசங்குளம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

வவுனியா ஹிச்சிராபுரம் பகுதியில் பிரபல முஸ்லிம் வர்த்தகரினால் நடாத்தப்படும் கட்டடக்கலை அழகுபடுத்தும் நிலையத்திலேயே நேற்று இச்சம்பவம் இடம்பெற்றிருந்தது.

இவ் நிலையத்தில் பணிபுரிந்து வந்த தமிழ் யுவதியுடன் குறித்த முஸ்லிம் வர்த்தகர் தவறாக நடக்க முயற்சி செய்துள்ளார்.

இதையடுத்து, பூவரசங்குளம் பொலிஸாரிடம் முஸ்லிம் வர்தகருக்கு எதிராக இளம் யுவதி முறைப்பாடு செய்ததன் அடிப்படையில் நேற்று முஸ்லிம் வர்த்தகர் கைது செய்யப்பட்டு இன்று வவுனியா நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.

இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணை பூவரசங்குளம் பொலிஸாரினால் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.


Recommended For You

About the Author: Editor