பாகிஸ்தானியர்கள் காஷ்மீர் செல்ல வேண்டாம்

பாகிஸ்தானியர்கள் காஷ்மீர் செல்ல வேண்டாம் என பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் திடீர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

பாகிஸ்தான்-ஆப்கானிஸ்தான் எல்லையில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் நிருபர்களிடம் கூறியதாவது:-

இந்திய அரசு காஷ்மீரில் கட்டுப்பாடுகளை விலக்கிக்கொள்வதுடன், 370-வது சட்டப்பிரிவை ரத்துசெய்யும் முடிவையும் திரும்பப்பெறாவிட்டால் அந்த நாட்டுடன் பேச்சுவார்த்தை நடத்தமாட்டோம்.

ஐ.நா. பொதுச்சபை கூட்டத்தில் இதுவரை இல்லாத அளவு மிகவும் உறுதியுடன் காஷ்மீர் பிரச்சினையை எடுத்துவைப்பேன்.

பாகிஸ்தானில் இருந்து யாராவது ஜிகாத் போராட்டத்துக்காக காஷ்மீருக்கு சென்றால், காஷ்மீர் மக்களுக்கு அநீதி இழைக்கும் முதல் நபராக நான் ஆகிவிடுவேன். அதோடு காஷ்மீர் மக்களின் எதிரியாகவும் நான் கருதப்படுவேன்.

காஷ்மீர் மக்களை படைகளால் முற்றுகையிட்டு தாக்குவதற்காக இந்தியா மன்னிப்பு கேட்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.

இம்ரான்கான் அமெரிக்கா சென்று டிரம்புடன் பேச்சுவார்த்தை நடத்தவும், ஐ.நா. பொதுச்சபை கூட்டத்தில் பங்கேற்கவும் உள்ள நிலையில் இவ்வாறு கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.


Recommended For You

About the Author: Editor