புலிகளின் ஆவணங்களை தேடி அகழ்வு

கிளிநொச்சி- சிவபுரம் பகுதியில் விடுதலைப்புலிகளினால் புதைக்கப்பட்டதாக கூறப்படுகின்ற  முக்கிய ஆவணங்கள் மற்றும் பெறுமதிமிக்க பொருட்களைத் தேடி அகழ்வும் பணிகள்  ஆரம்பமாகியுள்ளன.

குறித்த பணிகள், கிளிநொச்சி நீதவான் நீதிமன்ற நீதிபதி த.சரவணராஜா முன்னிலையில் கடற்படையினர், இராணுவத்தினர் மற்றும் பொலிஸார் ஆகியோர் தற்போது முன்னெடுத்துள்ளனர்.

இந்த சம்பவத்தினை பார்வையிடுவதற்கு அப்பிரதேச மக்கள் குவிந்துள்ளனர்.

நாட்டில் நடைபெற்ற இறுதி யுத்தத்தின் போது, விடுதலைப்புலியினர், தங்களின் முக்கிய ஆவணங்கள், மற்றும் பெறுமதியான தங்க ஆபரணங்கள் ஆகியவற்றை சிவபுரம் பகுதியில் புதைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஆகையால் இதற்கு முன்னரும் இத்தகையதொரு அகழ்வு பணியில் இராணுவத்தினர் ஈடுபட்டனர். ஆனால் எந்ததொரு பொருட்களும் கிடைக்காமல் ஏமாற்றமடைந்திருந்தனர்.

இந்நிலையில் புதைக்கப்பட்டதாக கூறப்படுகின்ற ஆவணங்கள், ஆபரணங்கள் ஆகியவற்றைத் தேடி மீண்டும் அகழ்வு பணியினை இராணுவத்தினர் தற்போது முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது


Recommended For You

About the Author: ஈழவன்