கோட்டாவுக்கு ஆதரவாக களத்தில் இராணுவம்

மஹிந்த அணியின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ச அம்பாறைக்கு விஜயம் செய்யவுள்ளார்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பிரதான கட்சி காரியாலயத்தினை திறந்து வைக்கும் நோக்கிலேயே இலங்கை நேரப்படி இன்று அங்கு விஜயம் செய்யவுள்ளார்.

ஜனாதிபதி தேர்தலுக்கான திகதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், நேற்று முதல் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் கட்டுப்பணம் செலுத்தி வருகின்றனர்.

அத்துடன் பிரதான கட்சிகள் அனைத்தும் ஜனாதிபதி தேர்தலுக்கான பிரச்சார நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ள நிலையில் கோட்டாபய ராஜபக்ஷ இன்று அம்பாறைக்கு செல்லவுள்ளார்.

இதேவேளை, கோட்டா இன்றைய தினம் அம்பாறைக்கு செல்லவுள்ள நிலையில், ஓய்வு பெற்ற இராணுவத்தினர் அங்கு விசேட பாதுகாப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.

கோட்டாபய ராஜபக்ஷ பாதுகாப்பு செயலாளராக பதவி வகித்த காலப்பகுதியில் அவருடன் இணைந்து பணியாற்றி சிலரும் இவ்வாறு பாதுகாப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.

அத்துடன், கோட்டா இன்றைய தினம் பங்கேற்கும் நிகழ்வுகான மேடை அமைக்கும் பணியில் இராணுவத்தினர் ஈடுபடுத்தப்பட்டிருந்ததுடன், அவற்றிக்கான பொருட்களும் அம்பாறையிலுள்ள இராணுவ முகாமிலிருந்து கொண்டுவரப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.


Recommended For You

About the Author: ஈழவன்