இ-சிகரெட்க்கு தடை

இ-சிகரெட் எனப்படும் எலக்ட்ரோனிக் சிகரெட்டுகளுக்கு தடை விதிக்கும் அவசர சட்டத்தை இந்திய மத்திய அரசு நேற்றையதினம் வெளியிட்டுள்ளது

இ-சிகரெட் சிகரெட்டுகளுக்கு தடை விதிக்க நேற்று முன்தினம் மத்திய அமைச்சரவைகட கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டநிலையில், இந்த தடையை அமுல்படுத்தும் அவசர சட்டத்தை மத்திய அரசு நேற்று வெளியிட்டுள்ளது

அதில், இ-சிகரெட்டுகளை உற்பத்தி செய்தல், ஏற்றுமதி-இறக்குமதி செய்தல், சேமித்து வைத்தல், அனுப்புதல், விற்பனை செய்தல், விளம்பரம் செய்தல் ஆகியவை அபராதத்துடன் கூடிய தண்டனைக்குரிய குற்றம் என்று கூறப்பட்டுள்ளது.

முதல்முறை தவறு செய்பவர்களுக்கு ஓராண்டுவரை சிறைத் தண்டனை அல்லது 1 லட்சம ரூபா வரை அபராதம் அல்லது இரண்டும் சேர்த்து விதிக்கப்படும். அடுத்தடுத்து தவறு செய்பவர்களுக்கு 3 ஆண்டுவரை சிறைத் தண்டனை அல்லது 5 லட்சம் ரூபா வரை அபராதம் அல்லது இரண்டும் சேர்த்து விதிக்கப்படும்


Recommended For You

About the Author: ஈழவன்