திருடிய பசுவுக்கு வர்ணம் பூசிய திருடன்

பசுவொன்றை திருடி அதன் நிறத்தை மாற்றி இறைச்சிக் கடைக்கு விற்பனை செய்த இளைஞனை, மொனராகலை பொலிஸார் கைதுசெய்துள்ளதுள்ளனர்.

இவ்வாறு இறைச்சிக்காக விற்பனை செய்யப்பட்ட பசு, மொனராகலை – பக்கினிகாவெல பிரதேசத்திலுள்ள இறைச்சிக்கடையொன்றிலிருந்து மீட்கப்பட்டுள்ளது.

பசுவின் உரிமையாளருக்குக் கிடைக்கப்பெற்ற தகவலையடுத்து, இறைச்சிக்கடைக்கு சென்ற உரிமையாளர், தன்னுடை பசு நிறந்தீட்டப்பட்டு விற்பனை செய்யப்பட்டுள்ளதை அறிந்து, பொலிஸாருக்கு அறிவித்துள்ளார். இதையடுத்தே, சந்தேக நபர் கைது செய்யப்பட்டார்.


Recommended For You

About the Author: ஈழவன்