மகிந்தவுடனான சந்திப்பு குறித்து டுவிட்டரில் மோடி!!

எதிர்க்கட்சி தலைவரான மஹிந்த ராஜபக்சவுடன் ஒரு விரிவான சந்திப்பு இடம்பெற்றிருந்தாக இந்திய பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

தனது உத்தியோகபூர்வ டுவிட்டர் பக்கத்தில் இட்டுள்ள பதிவில் அவர் மேற்படி விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.

அந்த பதிவில் மேலும், பயங்கரவாதத்தை எதிர்த்தல், பாதுகாப்பு மற்றும் பொருளாதார அபிவிருத்தி என்பன தொடர்பில் இலங்கைக்கும் இந்தியாவிற்கும் இடையில் நெருக்கமான ஒத்துழைப்பு தேவை என்பது தொடர்பில் கலந்துரையாடப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Recommended For You

About the Author: Editor