டயகம சௌமியமூர்த்தி தொண்டமான் பாடசாலையில் நடப்பது என்ன

மலைநாட்டு புதிய கிராமங்கள் சமூக அபிவிருத்தி அமைச்சர் கௌரவ பழனி திகாம்பரம் அவர்களின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் டயகம பிரதேசத்தில் பாரிய அபிவிருத்தி வேலைத்திட்டங்களை தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

அந்த வகையில் தொழிலாளர் தேசிய சங்கத்தின் உப தலைவரும் அக்கரபத்தனை பிரதேச சபை உறுப்பினருமான திரு சிவானந்தன் அவர்களின் வேண்டுகோளுக்கு அமைய கௌரவ அமைச்சரின் நிதியிலிருந்து டயகம மேற்கு சௌமியமூர்த்தி தொண்டமான் கல்லூரியின் அபிவிருத்திக்காக 25 இலட்ச ரூபா ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது .

அதற்கமைய குறித்த கல்லூரியை பாதுகாக்கும் முகமாக கல்லூரியை சுற்றி வேலி அமைப்பதற்கு 20 லட்சம் ரூபாவும் கல்லூரியின் முகப்பில் மதில் ஒன்றினை அமைப்பதற்காக 5 லட்ச ரூபா ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது ..

தற்போது குறித்த கல்லூரியின் வேலி அமைப்பு பணிகள் முற்றாக நிறைவு பெற்று இருக்கும் அதேவேளை மதில் அமைக்கும் பணிகள் ஆரம்பித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அத்தோடு டயகம் பகுதியிலிருந்து பாடசாலை ஊடாக செல்லும் ஆற்றை ஆழப்படுத்தி அகலப்படுத்தும் பணிக்காக 20 லட்ச ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக பிரதேசசபை உறுப்பினர் தெரிவித்தார்.

ஏனெனில் குறித்த ஆறானது மழைக்காலங்களில் பெருக்கெடுத்து வருவதன் காரணமாக பிரதேச மக்களின் குடியிருப்புகள் மற்றும் பயிர் நிலங்களை பாதுகாக்கும் வகையில் இவ் வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படுவதாக பிரதேச சபை உறுப்பினர் சிவானந்தன் அவர்கள் மேலும் தெரிவித்தார்.

எனவே கௌரவ அமைச்சரின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் டயகம மேற்கு பிரதேசத்தில் 45 லட்ச ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டு அவற்றிற்கான பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது

செய்தி- லிந்துலை லிப்பகலை சுரேஷ்


Recommended For You

About the Author: Editor