மார்செய் நகர வீதியில் திடீரென ஏற்பட்ட குழி! – அதிர்ச்சியில் மக்கள்…!!

மார்செய் நகரின் வீதி ஒன்றில் திடீரென பெரும் பள்ளம் ஒன்று ஏற்பட்டதை அடுத்து போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

நேற்று புதன்கிழமை நண்பகலின் பின்னர் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. Avenue du Prado வீதியின் நாற்சந்தியின் நடுவில் இந்த குழி ஏற்பட்டுள்ளது.

வீதியில் பயணித்தவர்கள் இந்த பள்ளத்தை கண்டு அதிர்ச்சியடைந்தனர். பின்னர் உடனடியாக அவசர இலக்கத்துக்கு தகவல் தெரிவித்தனர். அதைத் தொடர்ந்து வீதியில் போக்குவரத்து தடை செய்யப்பட்டு, குழியை சுற்றி பாதுகாப்பு வளையம் அமைக்கப்பட்டது.

அந்த குழி 8 மீற்றர் ஆழம் கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 13:00 மணி அளவில் பள்ளம் ஏற்பட்டதாகவும், உடனடியாக திருத்தப்பணிகள் ஆரம்பிக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இருப்பினும் rue Basse Sainte Philomène வீதியில் போக்குவரத்து தடை மறு அறிவிப்பின்றி தடை செய்யப்பட்டுள்ளது.

இச்சம்பவத்தில் எவரும் காயமடையவில்லை.


Recommended For You

About the Author: Editor