Gare du Nord நிலையத்தில் இருந்து Charles-de-Gaulle வரை RER B சேவைத்தடை..!!

Gare du Nord நிலையத்தில் இருந்து Charles-de-Gaulle விமான நிலையம் வரை பயணிக்கும் RER B தொடருந்து இவ்வார இறுதியில் தடைப்பட உள்ளது.

திருத்தப்பணிகளுக்காக இந்த போக்குவரத்து தடை ஏற்பட உள்ளது. 21 ஆம் திகதி சனிக்கிழமை மற்றும் 22 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை ஆகிய இரண்டு நாட்களும் இந்த சேவைகள் இடம்பெற மாட்டாது.

Gare du Nord நிலையத்தில் இருந்து Charles-de-Gaulle நிலையம் வரையான சேவையும், Gare du Nord நிலையத்தில் இருந்து Mitry-Claye நிலையம் வரையான சேவையும் தடைப்படும். தவிர K வழி சேவையும், Transilien சேவையும் இவ்விரண்டு நாட்களில் தடைப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

நவீனமயமாக்கல் பணி காரணமாக இந்த போக்குவரத்து தடை ஏற்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பயணிகள் மாற்று சேவைகளை பயன்படுத்தும் படி கோரப்பட்டுள்ளனர்.


Recommended For You

About the Author: Editor