தேர்தலில் களத்தில் ஜே.வி.பி

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் மக்கள் விடுதலை முன்னணி பொது சின்னத்தில் பொது வேட்பாளர் ஒருவரை நிறுத்த உள்ளதாக அந்த கட்சியின் பிரச்சார செயலாளர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி தேர்தலில் மக்கள் விடுதலை முன்னணி பொது வேட்பாளர் ஒருவரை நிறுத்த உள்ளதாக வெளியாகியுள்ள தகவல்கள் தொடர்பாக கருத்து வெளியிடும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

பொது வேட்பாளரின் சின்னம் மணியாக இருக்காது, அரசியல் கட்சிகள் மற்றும் சிவில் அமைப்புகளின் உதவியுடன் அந்த பொது வேட்பாளர் நிறுத்தப்படுவார்.

மக்கள் விடுதலை முன்னணியின் ஸ்தாபகர் ரோஹன விஜேவிர மற்றும் நந்த குணதிலக்க ஆகியோரின் பின், மக்கள் விடுதலை முன்னணியின் சார்பில் எவரும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


Recommended For You

About the Author: Editor