தேஜஸில் பறந்த பாதுகாப்புத் துறை அமைச்சர்!

இலகு ரக தேஜஸ் போர் விமானத்தில் பயணித்த நாட்டின் முதல் பாதுகாப்புத் துறை அமைச்சர் என்ற பெருமையை பெறுகிறார் ராஜ்நாத் சிங்.
கடற்படைக்காக உள்நாட்டிலேயே பிரத்யேகமாக தயாரிக்கப்பட்ட போர் விமானம் தேஜஸ் ஆகும். ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட தேஜஸ் இந்தியாவில் வடிவமைக்கப்பட்டது.
தேஜஸ் படையில் சேர்க்கத் தகுதியானது என 2011ஆம் ஆண்டு சான்றிதழ் வழங்கப்பட்டது. இந்த விமானம், உலகிலேயே சிறிய, இலகு ரக, ஒற்றை என்ஜின் கொண்ட நவீன போர் விமானமாகும்.
கடந்த செப்டம்பர் 13ஆம் தேதி, போர்க் கப்பல்களில் தரையிறக்கும் வகையில் மேற்கொள்ளப்பட்ட மாதிரி சோதனை கோவாவில் உள்ள ஐஎன்எஸ் ஹன்சா கடற்படை தளத்தில் வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டது.
இந்நிலையில் இன்று காலை பெங்களூரு ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் நிறுவன விமான நிலையத்திலிருந்து பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தேஜஸ் போர் விமானத்தில் பறந்தார்.
இதன் மூலம், தேஜஸ் போர் விமானத்தில் பறந்த நாட்டின் முதல் பாதுகாப்புத் துறை அமைச்சர் என்ற பெருமையை ராஜ்நாத் சிங் பெறுகிறார்.
இதுகுறித்து பாதுகாப்புத் துறை அமைச்சக வட்டாரங்கள் கூறுகையில், ” இந்திய ஏரோநாட்டிகல் லிமிடட் நிறுவன அதிகாரிகளை ஊக்கப்படுத்தும் வகையில் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட இலகு ரக போர் விமானமான தேஜஸ் விமானத்தில் பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பயணித்தார்.
இந்த விமானப் பயணத்தின் போது, ராஜ்நாத் சிங் விமானிகளுக்கான ஜி சூட் ஆடை அணிந்திருந்தார்.
ராஜ்நாத் சிங்குடன் விமானப்படை துணைமார்ஷல் என் திவாரி பயணித்தார்.மேலும் இதன்மூலம் தேஜஸ் விமானத்தை இயக்கும் விமானிகளுக்கும் இது ஊக்கமாக அமையும்” எனத் தெரிவித்தார்.

Recommended For You

About the Author: Editor