
மாத்தறை, ஊறுபொக்க பெரலபனாதர பிரதேசத்தில் பல்நோக்கு கூட்டுறவு சங்கத்தின் அதிகாரி ஒருவர், இரண்டு வெள்ளை வான்களில் வந்தவர்களால் இன்று (19) கடத்திச்செல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
பெரலபனாதர நகரத்தில் வைத்து இந்த கடத்தல் இடம்பெற்றுள்ளதாக ஊறுபொக்க பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
தமது பெரலபனாதர பகுதியை சேர்ந்த 45 வயதுடைய ஒருவரே இவ்வாறு கடத்தப்பட்டுள்ளார்.
தமது பிள்ளைகள் இருவரை பாடசாலைக்கு அழைத்துச் சென்று வீடு திரும்பிய நிலையில் அவர் கடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த இரண்டு வான்களில் இலக்கத் தகடு இல்லை என்றும், அதில் ஒரு வான் ஊறுபொக்க பகுதியில் இருந்து கொட்டபொல பகுதிக்கும் மற்றைய வான் கொட்டபொல பகுதியில் இருந்து ஊறுபொக்க பகுதிக்கும் பயணித்துள்ளமை தெரியவந்துள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர்.
நகரத்தில் பொருத்தப்பட்டிருந்த சி.சி.டிவி கமெராக்களின் உதவியுடன் சந்தேக நபர்களை கைதுசெய்யவதற்கான விசாரணைகளை ஊறுபொக்க பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்