மன்னாரில் விபரீதம்

மன்னாரில் சமுர்த்தி நிவாரண உரித்து படிவம் வழங்கும் நிகழ்வு இன்று இடம்பெற்ற போது மின்குமிழ் பொருத்தப்பட்ட கம்பம் சரிந்து விழுந்ததில் மூவர் காயமடைந்து மன்னார் பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மன்னார் மாவட்டத்தில் தெரிவு செய்யப்பட்ட சமுர்த்தி பயனாளிகளுக்கான சமுர்த்தி நிவாரண உரித்து படிவம் வழங்கும் நிகழ்வு மன்னார் பொது விளையாட்டு மைதானத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

நிகழ்வு இன்று காலை 9.30 மணியளவில் இடம்பெறவிருந்த நிலையில், தவிர்க்க முடியாத காரணத்தால் மாலை 2.30 மணிக்கு பிற்போடப்பட்டிருந்தது.

இதனால் நிகழ்விற்காக காலையிலேயே வருகை தந்த ஆயிரக்கணக்கான மக்கள் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

மதியம் 2 மணியளவில் நிகழ்வு ஆரம்பிக்கப்பட்டு இடம்பெற்று கொண்டிருந்த நிலையில் புதிதாக அமைக்கப்பட்ட மேடையுடன் கூடிய தற்காலிக மண்டபத்தில் மக்கள் அமர்ந்திருந்த பகுதியில் மின்குமிழ் பொருத்தப்பட்ட கம்பம் வேகமாக காற்று வீசியதால் சரிந்து மக்கள் மீது விழுந்தது.

இதன்போது வயோதிப ஆண் ஒருவரும், வயோதிப பெண்கள் இருவரும் காயமடைந்த நிமைலயில் மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.

மேலும் கடும் காற்றின் காரணமாக தற்காலிக மேடையின் மேல் கூரைப்பகுதி கடுமையாக சேதத்திற்கு உள்ளாகியுள்ளதாக தெரியவருகின்றது.


Recommended For You

About the Author: Editor