இந்திய 7 விக்கெட்டுகளால் வெற்றி

இந்தியா மற்றும் தென்னாபிரிக்கா அணிகளுக்கு இடையிலான இரண்டாவது இருபதுக்கு இருபது போட்டியில் இந்திய அணி 7 விக்கெட்டுகளால் அபார வெற்றி பெற்றுள்ளது.

பஞ்சாப்பின் மொஹாலி மைதானத்தில் நேற்று  நடைபெற்ற இப்போட்டியில் நாணயச் சுழற்சியில் வெற்றிபெற்ற இந்திய அணி முதலில் களத்தடுப்பைத் தேர்வு செய்தது.

அந்த வகையில் முதலில் துடுப்பெடுத்தாடிய தென்னாபிரிக்க அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 5 விக்கெட்டுகளை இழந்து 149 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது.

அணி சார்பாக அணித்தலைவர் குயின்டன் டி கொக் 52 ஓட்டங்களையும் ரெம்பா பவுமா 49 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர்.

பந்து வீச்சில் இந்திய அணி சார்பாக தீபக் சாகர் 2 விக்கெட்டுகளையும், நவ்தீப் சைனி, ஜடேஜா மற்றும் கார்த்திக் பாண்டியா ஆகியோர் தலா ஒவ்வொரு விக்கெட்டையும் கைப்பற்றினர்.

இந்நிலையில் பதிலுக்கு 150 ஓட்டங்களை எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி, 19 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை மாத்திரம் இழந்து 7 விக்கெட்டுகளால் வெற்றியை சுவீகரித்தது.

இந்திய அணி சார்பாக அணித்தலைவர் விராட் ஹோலி 72 ஓட்டங்களையும், சிஹர் தவான் 40 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர்.

3 போட்டிகள் கொண்ட இரு அணிகளுக்கும் இடையிலான இருபதுக்கு இருபது போட்டியில் முதல் போட்டி மழை காரணமாக கைவிடப்பட்டது.

இந்நிலையில் இரண்டாவது போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்று 1:0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.


Recommended For You

About the Author: ஈழவன்