பயங்கரவாதிகளின் பேஸ்புக்கள் முடக்கம்

பயங்கரவாதக் குழுக்களுடன் தொடர்புடைய 26 மில்லியனுக்கும் அதிகமான உள்ளடக்கங்களை நீக்கியுள்ளதாக பேஸ்புக் நிறுவனம் அறிவித்துள்ளது.

ஐ.எஸ் மற்றும் அல்கொய்தா போன்ற சர்வதேச பயங்கரவாத குழுக்கள் தொடர்பான உள்ளடக்கங்களே கடந்த இரண்டு ஆண்டுகளில் இவ்வாறு நீக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சர்வதேச அளவில் நடைபெற்று வரும் தீவிரவாதத் தாக்குதலுக்கு பயங்கரவாதக் குழுக்கள் பெரும்பாலும் சமூக வலைதளங்களையே பயன்படுத்தி வருகின்றன.

நியூஸிலாந்திலுள்ள மசூதி ஒன்றில் கடந்த மார்ச் மாதம் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் சம்பவம் பேஸ்புக்கில் நேரலையாக ஒளிபரப்பப்பட்டது.

இது சமூக வலைதளங்களின் தொழில்நுட்பங்களுக்கே விடுக்கப்பட்ட சவாலாகவும் கருதப்படுகிறது.

இந்தநிலையிலேயே பயங்கரவாதக் குழுக்களின் பேஸ்புக் கணக்குகள் நீக்கப்பட்டுள்ளதாக பேஸ்புக் நிறுவனம் அறிவித்துள்ளது.

சமூக வலைதளங்களில் இயங்கிவரும் பயங்கரவாதக் குழுக்கள் குறித்து முறைப்பாடுகள் செய்யப்படுவதற்கு முன்பாகவே 99 சதவீதம் அவற்றின் உள்ளடக்கங்கள் முடக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பயங்கரவாதக் குழுக்கள் மட்டுமின்றி அந்த அமைப்புகளைப் பாராட்டும் அல்லது ஆதரிப்பவர்கள் இனங்காணப்பட்டுள்ளதாகவும் பேஸ்புக் நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.


Recommended For You

About the Author: ஈழவன்