இந்திய மீனவர்கள் கைது

இலங்கை கடற்பரப்பினுள் அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் இந்திய மீனவர்கள் ஐவர், கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

யாழ். நெடுந்தீவு கடல் பிரதேசத்திலிருந்து வடமேல் திசையில் கோவிலம் கலங்கரை விளக்கத்தை அண்டிய கடற்பகுதியில் கடற்படையினர் நேற்று (18) ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.  இதன்போது குறித்த பகுதியில் அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் ரோலர் படகொன்றுடன் குறித்த மீனவர்கள் ஐவரும் கைது செய்யப்பட்டதாக, கடற்படையினர் தெரிவித்தனர்.

அதன் படி கடற்படையினரினால் கைப்பற்றப்பட்டுள்ள படகு, இலங்கை கடற்படை கப்பல் எலார நிறுவனத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளதோடு, கைது செய்யப்பட்டுள்ள மீனவர்கள் இலங்கை கடற்படை கப்பல் உத்தர நிறுவனத்திற்கும் கொண்டு வரப்பட்டுள்ளனர்.

மருத்துவ பரிசோதனையின் பின்னர், யாழ். மீன்பிடித் திணைக்கள உதவிப் பணிப்பாளரிடம் குறித்த மீனவர்களை ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக, கடற்படையினர் தெரிவித்தனர்.


Recommended For You

About the Author: ஈழவன்