புலிகளின் தேக்கமரங்கள் தறிக்கப்படுகின்றன

தமிழீழ விடுதலைப் புலிகளால் நடப்பட்ட தேக்கம் மரங்கள் வனவளத் திணைக்களத்தால் தறிக்கப்பட்டு எடுத்துச் செல்லப்படுவதாக பொது மக்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

வவுனியா பன்றிக்கெய்தகுளம் பகுதியில் தமிழீழ விடுதலைப் புலிகளின் பொருண்மிய மேம்பாட்டுக் கழகத்தினால் பயன் தரும் தேக்கம் மரங்கள் நடப்பட்டன. அவை வனவளத் திணைக்களத்தினரால் கனரக வாகனங்கள் எடுத்துவரப்பட்டு தறிக்கப்பட்டு எடுத்துச் செல்லப்படுகின்றன.

பன்றிக்கெய்தகுளம், ஆறுமுகத்தான் புதுக்குளம் கிராம அலுவலகர் பிரிவிலுள்ள மரையடித்தகுளம் இந்தியன் வீட்டுத்திட்டம் பகுதியிலுள்ள இரண்டு ஏக்கர் தேக்கம் காட்டிற்குள் சென்ற வனவளத் திணைக்கள உத்தியோகத்தர்கள் தேக்கம் மரங்களைத் தறித்து வருகின்றன.

பன்றிக்கெய்தகுளம் பகுதியில் 20 முதல் 30 வருடங்களுக்கு முன்னர் தமிழீழ விடுதலைப் புலிகளினால் நடப்பட்டு பொருண்மிய மேம்பாட்டுக் கழகத்தினால் பராமரிக்கப்பட்டு வந்த பயன் தரும் பல தேக்கம் மரங்களே இவ்வாறு இன்று அங்கிருந்து வனவளத் திணைக்களத்தினால் தறிக்கப்பட்டு எடுத்துச் செல்லப்படுகின்றன.

இதையடுத்து அப்பகுதியில் ஒன்றிணைந்த பொதுமக்கள் வனவளத் திணைக்கள அதிகாரிகளிடம் இது குறித்து கேட்டபோது,
“திணைக்களத்திற்குச் சொந்தமான பகுதியிலுள்ள தேக்கம் மரங்களே இவ்வாறு தறிக்கப்பட்டு வருகின்றன. பெரிய மரங்கள் தறிக்கப்பட்டு புதிய மரங்கள் நடுவதற்காகவே இவ்வாறு தறிக்கப்பட்டு வருவதாகப் பதிலளிக்கப்பட்டது.


Recommended For You

About the Author: ஈழவன்