யாழ்.பாடசாலை அதிபர்கள் கைது செய்யப்படவில்லை

யாழ்.இந்துக்கல்லூரி பாடசாலை அதிபர் உட்பட எந்த அதிபரும் கைது செய்யப்படவில்லை என வடமாகாண கல்வி அமைச்சின் அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.

பாடசாலைகளில் மாணவர்களை சேர்பதற்கு பணம் கோரினார்கள் எனும் குற்றசாட்டில் பாடசாலை அதிபர்கள் இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்டார்கள் என நேற்றைய தினம் புதன்கிழமை மாலை இணையத்தளங்கள் உட்பட சமூக வலைத்தளங்களில் செய்திகள் பரவியிருந்தன.

அது குறித்து வடமாகாண கல்வி அமைச்சின் அதிகாரியொருவரை கேட்ட போது ,
யாழில். உள்ள பிரபல பாடசாலை , அச்சுவேலி பகுதியில் உள்ள பாடசாலை ஒன்று உட்பட சில பாடசாலைகளில் மாணவர்களை இணைப்பதற்கு அதிபர் பணம் கோரினார் என பெற்றோரால் முறைப்பாடுகள் செய்யப்பட்டன. அதில் காணொளி ஆதாரங்கள் உடன் கூட முறைப்பாடு கிடைக்கபெற்று உள்ளன.

அவற்றின் அடிப்படையில் பாடசாலை அதிபர்களிடம் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. நேற்றைய தினமும் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டன. ஆனால் அதிபர்கள் எவரும் நேற்றைய தினம் கைது செய்யப்படவில்லை.

குறித்த குற்றசாட்டுக்கள் தொடர்பில் விசாரணைகள் நடைபெற்று வருவதனால் , அவை குறித்த மேலதிக விபரங்களை தெரிவிக்க முடியாதுள்ளது. அவை விசாரணைகளை பாதிக்கும் என மேலும் தெரிவித்தார்.


Recommended For You

About the Author: ஈழவன்