ஜனாதிபதி தேர்தலுக்கு கட்டுப்பணம் செலுத்தலாம்

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலை முன்னிட்டு இன்று (19) முதல் கட்டுப்பணம் செலுத்துவதற்கான சந்தர்ப்பம் வழங்கப்படவுள்ளது.

இதன்பிரகாரம், இன்று முதல் எதிர்வரும் 6 ஆம் திகதி நண்பகல் வரை கட்டுப்பணம் செலுத்த முடியும் என தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தல் நவம்பர் 16 ஆம் திகதி நடைபெறவுள்ளதுடன், எதிர்வரும் 7ஆம் திகதி வேட்பு மனுக்கள் கோரப்படவுள்ளன.

இதற்கான வர்த்தமானி அறிவித்தல் நேற்றிரவு வௌியிடப்பட்டுள்ளதுடன், எதிர்வரும் 7 ஆம் திகதி காலை 9 மணி முதல் 11 மணி வரையான காலப்பகுதிக்குள் ஜனாதிபதித் தேர்தலுக்கான வேட்பு மனுக்களைத் தாக்கல் செய்ய வேண்டும் என தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.


Recommended For You

About the Author: ஈழவன்