நிலவுக்கு செல்லும் முயற்சியை நாசா கைவிடவேண்டும் – டிரம்ப்!

நிலவுக்கு மீண்டும் செல்வதற்கான முயற்சியை நாசா கைவிடவேண்டும் என அமெரிக்க அதிபர் டிரம்ப் சமூக வலைத்தளமான டுவிட்டரில் குறிப்பிட்டுள்ளார்.

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் ‘50 வருடங்களுக்கு முன்பே நிலவுக்கு சென்று வந்து விட்டோம், இனி விண்வெளி திட்டங்களுக்கு நாம் செலவிடும் தொகையும் நமது நோக்கமும் செவ்வாய் கிரக பயணம், ராணுவம் மற்றும் அறிவியல் உள்ளிட்ட அம்சங்களை சார்ந்ததாகவே இருக்க வேண்டும்’. என குறிப்பிட்டிருந்தார்.

செவ்வாய் கிரகத்துக்கு செல்வதற்கான திட்டங்களை நாசா விரைவாக செயல்படுத்தும்படி டிரம்ப் மறைமுகமாக வலியுறுத்துவதையே இது காட்டுகிறது.

2024ல் நிலவில் தரையிறங்குவதற்கான திட்டத்தை அமெரிக்காவின் துணை அதிபர் மைக் பென்ஸ் கடந்த ஏப்ரல் மாதம் அறிவித்திருந்தார்.

‘1969 முதல் 1972 வரை நிலவுக்கு செல்வதற்கு நாசா, 6 அப்பல்லோ திட்டங்களை செயல்படுத்தியுள்ளது.

சந்திரனுக்கும் செவ்வாய் கிரகத்துக்குமான ஆய்வுகள் ஒன்றொடொன்று பிணைக்கப்பட்டுள்ளன.

புதிய கருவிகளை சோதனைக்கு உட்படுத்துதல், மனித பழக்கவழக்கங்கள், வாழ்வாதார முறைகள் போன்றவற்றை செயல்படுத்த நிலவு ஒரு தகுந்த இடமாக இருக்கும்.

மேலும் இது பூமிக்கு அப்பால் உள்ள மற்ற கிரகங்களில் வாழ்வதற்கான சூழ்நிலைகளை ஏற்படுத்த உதவியாக இருக்கும்’ என நாசா இணையதளத்தில் பதிவிடப்பட்டுள்ளது.

நாசா நிறுவனர் ஜிம் பிரிடென்ஸ்டைன் கடந்த ஏப்ரலில் கூறுகையில், இம்முறை நிலவுக்கு செல்லும் போது கடந்த முறை போன்று கொடியையும் கால்தடங்களையும் விட்டுவரமாட்டோம், நாம் அங்கேயே நிரந்தரமாக வாழ்வோம், என்றார்

கடைசியாக மே 13 ல் இதுபற்றி டிரம்பின் ட்வீட்டில், எனது ஆட்சியில் மீண்டும் நிலவுக்கு செல்வதற்கான திட்டம் உள்ளது.

அதன்பின் செவ்வாய் கிரகத்துக்கும் செல்லும் திட்டமும் உள்ளது.

புதிய பட்ஜெட் திட்டத்தில் விண்வெளிக்கு செல்லும் திட்டங்களுக்காக 1.6 பில்லியன் டாலர் சேர்க்கப்பட்டுள்ளது எனவும் குறிப்பிட்டிருந்தார்.


Recommended For You

About the Author: Editor