சர்வதேச புத்தகக் கண்காட்சி கொழும்பில் ஆரம்பம்!

சர்வதேச புத்தகக் கண்காட்சி கொழும்பில் ஆரம்பமாகவுள்ளது.

கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் எதிர்வரும் 20ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள இந்தக் கண்காட்சி 29ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.

ஆசியாவிலேயே வெற்றிகரமான புத்தகக் கண்காட்சியாகக் கருதப்படும் இந்தக் கண்காட்சியை இலங்கை நூல் வெளியீட்டாளர் சங்கம் 21ஆவது தடவையாக ஏற்பாடு செய்துள்ளது.

இங்கு 417 உள்நாட்டு, வெளிநாட்டு காட்சிக் கூடங்கள் அமைக்கப்படவுள்ளதாக ஏற்பாட்டாளர்கள் அறிவித்துள்ளனர்.

குறிப்பாக இங்கு இந்தியா, சீனா, மலேசியா, பிரித்தானியா மற்றும் ஈரான் போன்ற பல நாடுகளின் காட்சிக் கூடங்கள் அமைக்கப்படவுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.


Recommended For You

About the Author: Editor