தர்ஷன் – கவின் திடீர் மோதல் உடைகிறதா ‘வி ஆர் பாய்ஸ்’

பிக்பாஸ் நிகழ்ச்சியில் தர்ஷன் வெற்றி பெற வேண்டும் என கடந்த 75 நாட்களாக ஆதரவு கொடுத்து வருபவர் கவின்.

கவினின் நண்பர் பிக்பாஸ் வீட்டிற்க்குள் வந்து ஒரு அறைவிட்டவுடன் தான் தன்னை நம்பியிருக்கும் நண்பர்களுக்காகவும், தனக்கு ஓட்டு போட்ட மக்களுக்காகவும் விளையாட முடிவு செய்தவர் கவின்

இந்த நிலையில் இன்றைய டாஸ்க் ஒன்றில் கவின், தர்ஷன் இடையே மோதல் நடக்கின்றது. தெர்மோகோல் பந்துகளை வெளியே எடுக்க ஒவ்வொரு போட்டியாளரும் முயற்சித்து வரும் நிலையில் தர்ஷனின் பையை பிடித்து கவின் இழுத்ததால் அந்த பையில் பெரிய ஓட்டை விழுந்துவிட்டது.

இதனால் தர்ஷன், கவின் மீது கோபப்படுகிறார். பையை கிழிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் தான் இழுக்கவில்லை என்றும் எல்லோரும் செய்தது போல் தான் தானும் செய்ததாக கவின் கூறியும் தர்ஷன் சமாதானம் ஆகவில்லை.

பிக்பாஸ் வீட்டில் முதல்முறையாக தர்ஷன், கவின் இடையே நடைபெறும் மோதலை சாண்டி, லாஸ்லியா உள்பட அனைவரும் அதிர்ச்சியுடன் பார்க்கின்றனர். பிக்பாஸ் போட்டி இறுதிக்கட்டத்தை நெருங்கி வரும் நிலையில் போட்டியாளர்களிடையே தியாக மனப்பான்மை மறைந்து மோதல் போக்கு ஆரம்பத்துவிட்டதால் ‘வி ஆர் பாய்ஸ்’ தானாக உடைந்துவிட்டதாக கருதப்படுகிறது


Recommended For You

About the Author: Editor