
அர்ஜுன் ரெட்டி’ படத்தில் அறிமுகமாகி அதன்பின்னர் ‘நோட்டா’, ‘டியர் காம்ரேட்’ உள்ளிட்ட ஒருசில படங்களில் நடித்த நடிகர் விஜய் தேவரகொண்டா மொத்தமே எட்டு படங்களில் மட்டும் நடித்திருந்தாலும் தென்னிந்தியா முழுவதும் பிரபலமாகிவிட்டார்.
இந்த நிலையில் விஜய் தேவரகொண்டாவின் ஒன்பதாவது படமாக உருவாகவிருக்கும் படத்தை கிரியேட்டிவ் கமர்சியல்ஸ் என்ற நிறுவனம் பிரமாண்டமாக தயாரிக்கவுள்ளது என்பதையும் இந்த படத்தின் டைட்டில் இன்று அறிவிக்கப்படவிருக்கின்றது என்பதையும் நேற்று பார்த்தோம். அந்த வகையில் இந்த படத்திற்கு ‘வேர்ல்ட் ஃபேமஸ் லவ்வர்’ என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளது.
இந்த படத்தில் நான்கு முன்னணி நடிகைகள் ஹீரோயின்களாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளனர். பிரபல நடிகைகளான ஐஸ்வர்யா ராஜேஷ், ராஷிகண்ணா, கேதரின் தெரசா ஆகிய மூவருடன் பிரபல நடிகை இசபெல்லி லியட் என்பவரும் நடிக்கவுள்ளார். மேலும் இந்த படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் வரும் 20ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கோபிசுந்தர் இசையில் ஜெயகிருஷ்ணா கும்மடி ஒளிப்பதிவில் இந்த படம் உருவாகவுள்ளது.