தற்கொலைதாரியின் உடலை புதைக்க உத்தரவு

கொழும்பு, கிங்ஸ்பெரி ஹோட்டலில் தற்கொலை குண்டுத்தாக்குதலை மேற்கொண்ட தற்கொலைதாரியின் சடலத்தின் பாகங்களை பொரளை பொதுமாயனத்தில் அடக்கம் செய்யுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

கோட்டை நீதவான் நீதிமன்றம் இந்த உத்தரவை இன்று (18)  பிறப்பித்துள்ளது.

தற்கொலைதாரியான மொஹமட் முபாரக்கின் உறவினர்கள் சடலத்தை ஏற்க மறுப்பு தெரிவித்துள்ளதாக குற்றப்புலனாய்வு துறை அதிகாரிகள் நீதிமன்றின் கவனத்துக்கு கொண்டுவந்த நிலையில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

குறித்த தற்கொலைதாரியின் சடலத்தின் பாகங்களை புதைத்த பின்னர் அது தொடர்பான அறிக்கையொன்றை நீதிமன்றில் முன்வைக்குமாறும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


Recommended For You

About the Author: ஈழவன்