சிங்கப்பூரில் சொத்து அதிகமாக வாங்கும் மலேசியர்கள் !

சீனாவைச் சேர்ந்தவர்களை அடுத்து சிங்கப்பூர் சொத்துகளை அதிகமாக வாங்கும் இரண்டாவது ஆகப் பெரிய வாடிக்கையாளர்கள் மலேசியர்கள் என்று மலேசியாவின் ‘த ஸ்டார்’ பத்திரிகை தெரிவித்துள்ளது.
2019ஆம் ஆண்டின் முதல் பாதியில் சீன நாட்டவர்களை அடுத்து மலேசியர்கள்தான் சிங்கப்பூர் சொத்துகளை அதிகம் வாங்கும் வெளிநாட்டவர் என்று சொத்துச்சந்தை ஆலோசனை நிறுவனங்களான ‘குஷ்மன் அன்ட் வேக்ஃபீல்ட்’, ‘செவ்வில்ஸ்’ ஆகியன வெளியிட்ட அறிக்கை காட்டுகிறது.

சிங்கப்பூரின் நகர மறுசீரமைப்பு ஆணையத்தின் தரவுகளை மேற்கொள் காட்டி இந்த அறிக்கை தயாரிக்கப்பட்டது.

சிங்கப்பூரில் சொத்துகளை அதிகமாக வாங்கும் வெளிநாட்டவர்கள் அந்த அறிக்கையில் இவ்வாறு தரவரிசைப்படுத்தப்பட்டனர்:

1.       சீனர்கள் (440 வீடுகள்)

2.       மலேசியர்கள் (283 வீடுகள்)

3.       இந்தியர்கள் (152 வீடுகள்)

4.       இந்தோனீசியர்கள் (116 வீடுகள்)

5.       அமெரிக்கர்கள் (65 வீடுகள்)

வியட்னாமிய வாடிக்கையாளர்களின் எண்ணிக்கையும் கூடி வருவதாக குஷ்மன் நிறுவனம் தெரிவித்தது.


Recommended For You

About the Author: Editor