மூன்றம்ச கோரிக்கையை முன் வைத்து நடைபயணம்

மூன்று அம்ச கோரிக்கைகளை முன்வைத்து வவுனியாவில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கிய நடைபயணமொன்று முன்னெடுக்கப்படவுள்ளது.

இந்த நடைபயணம் எதிர்வரும் 21ஆம் திகதி சனிக்கிழமை வவுனியாவிலிருந்து ஆரம்பமாகவுள்ளது.

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் இளைஞரணியினால் இந்த நடைபயணம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்கு, சிங்கள குடியேற்றங்களை நிறுத்தி, அரசியல் கைதிகளை விடுதலை செய் போன்ற கோரிக்கைகளை முன்வைத்தே இந்த நடைபயணம் முன்னெடுக்கப்படவுள்ளது.

வவுனியா நகரசபை வாயிலில் அமைந்துள்ள பொங்குதமிழ் தூபியிலிருந்து ஆரம்பமாகும் இந்த நடைபயணம் மற்றும் தியாக தீபத்தின் திருவுருவப்படம் தாங்கிய ஊர்திப்பயணம் யாழ்பாணத்தை நோக்கி சென்றடையவுள்ளது.

இந்த பயணத்தில் அனைவரும் கலந்துகொண்டு நிறைவேற்றப்படாமல் இருக்கின்ற தியாகி திலீபனின் கோரிக்கைகளை நிறைவேற்ற வலுச்சேர்க்குமாறு ஏற்பாட்டுக் குழு அழைப்பு விடுத்துள்ளது.


Recommended For You

About the Author: ஈழவன்