அருவம் படத்தின் டீசர்

நடிகர் சித்தார்த், ஜி.வி. பிரகாஷுடன் நடித்து வரும் ‘சிவப்பு மஞ்சள் பச்சை’ படத்தின் புரமோஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் அவர் நடித்து வரும் இன்னொரு படத்தின் புரமோஷன் பணிகளும் தொடங்கிவிட்டன.

சித்தார்த் நடித்து வரும் திகில் படமான ‘அருவம்’ படத்தின் டீசர் இன்று வெளியாகவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த படத்தை இயக்குநர் சாய்ஷேகர் என்பவர் இயக்கி வருகிறார். சித்தார்த் ஜோடியாக காத்ரீன் தெரசா நடித்து வரும் இந்த படத்திற்கு தமன் இசையமைத்து வருகிறார். ஏகாம்பரம் ஒளிப்பதிவில் பிரவீன் கே.எல். படத்தொகுப்பில் உருவாகிவரும் இப்படத்தின் ஃபெர்ஸ்ட் லுக் போஸ்டர் தற்போது வெளியாகியுள்ளது.

சித்தார்த், காத்ரீன் தெரசா இருவரது முகத்திலும் ரத்தக்கோடு தெரியும் இந்த போஸ்டர், இதுவொரு திகில் படம் என்பதை உறுதி செய்துள்ளது.

அத்துடன், இந்த படத்தின் டீசரை இயக்குநர் வெங்கட்பிரபு தனது சமூக வலைத்தளத்தில் இன்று வெளியிடவுள்ளார். ‘ஜிகர்தண்டா’ படத்தின் வெற்றிக்கு பின்னர் இப்படம் அவருக்கு இன்னொரு வெற்றிப்படமாக அமையுமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்


Recommended For You

About the Author: Editor