பஸ்களை கண்காணிக்க GPS

GPS தொழில்நுட்பத்தினூடாக பயணிகள் பஸ்களை கண்காணிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக மேல்மாகாண வீதி பயணிகள் போக்குவரத்து அதிகார சபையின் தலைவர் துஷித குலரத்ன தெரிவித்துள்ளார்.

சிறந்த போக்குவரத்து சேவையினை பயணிகளுக்கு வழங்கும் வேலைத்திட்டத்தின் ஊடாக, இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதுடன், பயணச்சீட்டு இயந்திரங்களை இலவசமாக வழங்கவும் நடவடிக்கை எடுத்துள்ளதாக அவர் கூறியுள்ளார்.

மேல் மாகாணத்தை மையப்படுத்தி இந்த வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.

பாணந்துறை – கொழும்பு, அவிசாவளை – கொழும்பு, கண்டி – கொழும்பு ஆகிய வழித்தடங்களில் பயணிக்கும் பஸ்களுக்கு புதிய தொழில்நுட்ப வசதிகள் ஏற்படுத்திக்கொடுக்கப்படவுள்ளன.

காலப்போக்கில் இந்த திட்டம் மேல்மாகாணம் முழுவதும் விஸ்தரிக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.


Recommended For You

About the Author: ஈழவன்