சட்டம் தெரியாதவர்களே தவறு செய்கிறார்கள்

சட்டத்தை அறியாதவர்களே தவறு செய்வதாகத் தெரிவித்துள்ள நீதி, சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சர் தலதா அதுகோரல,  போலிச் செய்திகள் பரவுவதைத் தடுப்பதற்கான புதிய சட்டமூலம் ஒன்றை கொண்டுவரவுள்ளதாகவும் தெரிவித்தார்.

இரத்தினபுரி – பலாங்கொடையில், நேற்று நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்துரைக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அங்கு தொடர்ந்துரைத்த அவர்,

தற்போதைய அரசாங்கம் 13 வருட கட்டாய கல்வியை அறிமுகப்படுத்தி உள்ளதெனவும் சட்டம் பற்றிய தெரிவு மாணவர்களுக்கு இருக்க வேண்டியது அவசியம் எனவும் தெரிவித்தார்.

சட்டத்தை அறியாதவர்களே தவறுகளை செய்வதாக தெரிவித்த அவர், போலிப்பிரசாரம் செய்வோருக்கு எதிராக சட்டமூலம் ஒன்றைத் தயாரித்து வருவதாகவும் அதனூடாக பொய்பிரசாரம் செய்வோருக்க எதிராககட கடுமையான சட்ட நவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்தார்.

அண்மையில் இரத்தினபுரியிலுள்ள பாடசாலையொன்றுக்கு வந்த சிறுவர்கள், ஹெல்மட் அணிவித்து அனுப்பட்டிருந்தனர் என்றும்  இவை அரசாங்கத்தை நெருக்கடிக்கு உள்ளாக்கும் செயல்கள் எனவும் தெரிவித்த அவர் இவ்வாறானச் செயற்பாடுகளை முகநூலில் பிரசாரம் செய்வதால், அரசாங்கம் நெருக்கடிக்கு ஆளாகபோவதில்லை எனவும் தெரிவித்தார்.

அதேபோல், அண்மையில் கல்தொட, தியவின்ன பகுதியில் வசிக்கும் சிலர் கம்பியொன்றின் ஊடாக பாலத்தை கடக்கும் காணொலிகள் வெளியிடப்பட்டிருந்தென தெரிவித்த அவர், அந்த பிரதேசக்கு 4 பாலங்கள் அமைத்து  கொடுக்கபட்டுள்ளதெனவும் தெரிவித்தார்.

எவ்வாறாயினும் நிரந்தரமாக ஆட்சி அதிகாரத்தை தக்கவைத்துகொள்ள வேண்டும் என்ற எண்ணம் தற்போதைய அரசாங்கத்துக்கு இல்லை எனவும்,  தற்போதைய அரசாங்கம் கருத்து சுதந்திரத்தை வழங்கிவிட்டு அதற்கான பிரதிபலன்களையும் அனுபவித்து வருகிறது என்றார்.


Recommended For You

About the Author: ஈழவன்