மாதவிடாயும், குழந்தை பாக்கியமும்

இறைவன் படைத்த உயிர் இனங்களில் செங்குத்தாக நிற்க்கும் பெண் இனத்திற்க்கு மட்டும் மாதம் ஒரு முறை வாடிக்கையாக உடலில் இருந்து வெளியேறும் விதமாக மாதவிடாயை அமைத்துள்ளான்

இந்த மாதவிடாய் பெண்களுக்கு இயற்கையாக வரும் என்று மட்டும் அநேகமானவர்கள் அறிந்து வைத்துள்ளார்களே தவிர

இதை ஏன் இறைவன் படைத்துள்ளான் ? மாதம் ஒரு முறை இது பெண்ணிண் உடலில் இருந்து ஏன் வெளிப்படுகின்றது ? என்ற அறிவியல் ரீதியான தகவல்களை தெளிவாக அறிந்து கொள்ளவில்லை

பருவ வயது அடைந்த ஒவ்வொரு பெண்ணிண் உடலில் ஒவ்வொரு மாதமும் மூன்றரை இலட்சம் சினை முட்டைகளை இறைவன் ஏற்படுத்துகின்றான்

அதாவது ஒரு பெண்ணிண் உடலில் ஒவ்வொரு மாதமும் உருவாகின்ற மூன்று அரை இலட்சம் சினை முட்டைகளை வைத்து மூன்று அரை இலட்சம் குழந்தைகளை உருவாக்கலாம்

ஆனாலும் அந்த மூன்று அரை இலட்சம் சினைமுட்டைகளில் முப்பது முட்டைகள் மட்டுமே ஆணிண் விந்து துளியில் இருக்கும் உயிரணுவை சுமந்து கருவை சுமக்க போட்டி போட்டு எதிர் பார்த்து நிற்கிறது

ஒரு சில நாட்களில் அந்த முப்பது சினைமுட்டைகளில் இருபத்தி ஒன்பது சினை முட்டையும் இறந்து போய் விடுகின்றது

மீதி ஒரே ஒரு சினை முட்டை மட்டுமே ஆணிண் விந்துத் துளியில் இருக்கும் உயிரணுவை பெற்று குழந்தை கருவை சுமக்க கருவரை வாசலில் வந்து காத்து நிற்கின்றது

அதாவது மாதவிடாய் துவங்கிய நாள் முதல் தொடர்ந்து வரும் பதினான்காம் நாளில் தான்

இந்த சினை முட்டை முழு வளர்ச்சி பெற்று கரு வாசலில் வந்து நிற்கின்றது

இந்த நாளில் ஒரு பெண்ணிண் கணவன் தன் மனைவியோடு இல்லறத்தில் ஈடுபட்டால் மட்டுமே அவனுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும்

இதில் இறைவனின் ஏற்பாடு என்னவெனன்றால் இந்த வளர்ச்சி அடைந்த சினை முட்டை கூட இருபத்தி நான்கு மணி நேரம் அதாவது ஒரே ஒரு நாள் மட்டும் தான் உயிரோடு இருக்கும்

ஒரு நாள் கடந்த பின்பு அதுவும் இறந்து விடுகின்றது இது இறக்கும் நாள் முன்போ அல்லது இறந்த நாள் பின்போ உயிரணுவை முழுமையாய் பெற்ற ஒரு ஆண் மகன் தன் மனைவியிடம் பல முறை இல்லறத்தில் ஈடுபட்டால் கூட குழந்தை பாக்கியத்தை நிச்சயம் பெறவே முடியாது

சுருக்கமாக சொல்வதானால் மனைவிக்கு மாதவிடாய் நின்று ஒரு வார காலம் உறை மாலாடீ போன்ற எவ்வித தடை சாதனமும் இல்லாது நீங்கள் நேரடியாக இல்லறத்தில் ஈடுபட்டாலும் சரி அல்லது சினை முட்டை அழிந்த பதினான்காம் தாண்டி அடுத்த மாதவிடாய் வரும் வரை நீங்கள் உங்கள் மனைவியரிடம் எவ்வித தடை சாதனமும் இன்றி இல்லறத்தில் ஈடுபட்டாலும் குழந்தை உருவாகாது

இந்த உடலியல் நுணுக்கத்தை புரியாமல் அநேகமானோர் இல்லறத்தில் ஈடுபடுவதால் தான் தங்களை மலடாகவும் மலடியாகவும் நினைத்துக் கொள்கின்றனர்

இந்த அறியாமையை பயன்படுத்தி தான் பாலியல் மருத்துர்களில் பலர் குழந்தை பாக்கியத்திற்க்கு நாங்கள் மருந்து தருகிறோம் எனும் பெயரில் மக்களின் பொருளாதாரத்தை சுரண்டி வாழ்கின்றனர்

நாம் குழந்தை பிறப்பிற்க்கு எதை உங்களுக்கு சொன்னோமோ அந்த மாதவிடாய் தேதியை உங்களிடமே சூட்சகமாய் அறிந்து அதற்க்கு தகுந்தார் போல் உங்களுக்கு ஆலோசனை தருவர்

அவர்கள் தரும் அநேக மருந்துகள் உங்களை சாந்தப்படுத்தும் சத்து மருந்துகளே தவிர குழந்தை பாக்கியத்தை உருவாக்கும் மருந்துகள் இல்லை

இது போன்ற மருத்துவர்களை தான் அநேகர் கைராசி டாக்டர் என்று ஊரெல்லாம் தம்பட்டம் அடிக்கும் சூழலை பார்க்கிறோம்

–+++++++++–

இது போக இலட்சத்தில் சில ஆண்களுக்கு அவர்களின் விந்துதுளியின் உயிரணுவில் பழகீனம் இருந்தாலோ

அல்லது பெண்களில் சிலருக்கு சினை முட்டையில் பழகீனம் இருந்தாலோ அவர்கள் மேற்கூறிய அடிப்படையில் இல்லறத்தில் ஈடுபட்டாலும் குழந்தை பிறப்பதில் கோளாறுகளோ அல்லது இயலாமையோ ஏற்படலாம்

இவர்கள் பாலியல் ரீதியாக படித்த முறையான மருத்துவரை அணுகி ஆலோசனைகளையும் மருந்துகளையும் பெற்றுத் தான் தனது உடலியல் கோளாறுகளை சீர் படுத்த வேண்டும் என்பதையும் மறுக்க முடியாது

———————–

திருமணம் ஆகாத பெண்களுக்கும் இது போன்ற நிலை ஏற்பட்டு ஆடவனின் உயிரணுவிற்க்கு வழியில்லாத பட்சத்திலும்

திருமணமானவர்கள் முறையாக இணையாது அந்த சினைமுட்டையை பாழ்படுத்தியதாலும் ஒட்டுமொத்தமாக மூன்றரை இலட்ச சினைமுட்டைகளும் பல்வேறு இரசாயன மாற்றங்களுக்கு பிறகு கழிவுகளாக இறைவன் அதை பெண்ணிண் உடலில் இருந்து வெளியேற்றுகின்றான் காரணம் இந்த கழிவுகள் பெண்கள் உடலில் தங்குமேயானால் அதனால் பல வித நோய்கள் ஏற்பட வாய்ப்புக்கள் அதிகமாக உள்ளது

وَيَسْأَلُونَكَ عَنِ الْمَحِيضِ ۖ قُلْ هُوَ أَذًى فَاعْتَزِلُوا النِّسَاءَ فِي الْمَحِيضِ ۖ وَلَا تَقْرَبُوهُنَّ حَتَّىٰ يَطْهُرْنَ ۖ فَإِذَا تَطَهَّرْنَ فَأْتُوهُنَّ مِنْ حَيْثُ
أَمَرَكُمُ اللَّهُ ۚ إِنَّ اللَّهَ يُحِبُّ التَّوَّابِينَ وَيُحِبُّ الْمُتَطَهِّرِينَ

மாதவிடாய் பற்றியும் உம்மிடம் வினவுகிறார்கள்

நீர் கூறும்: “அது (ஓர் உபாதையான) தீட்டு ஆகும்

ஆகவே மாதவிடாயின் போது பெண்களை விட்டும் விலகியிருங்கள்

அவர்கள் தூய்மையாகும் வரை அவர்களை அணுகாதீர்கள்

அவர்கள் தூய்மையடைந்த பின் அல்லாஹ் எப்படி கட்டளையிட்டிருக்கின்றானோ அதன்படி அவர்களிடம் செல்லுங்கள்

பாவங்களைவிட்டு மீள்பவர்களை நிச்சயமாக அல்லாஹ் நேசிக்கிறான்

இன்னும் தூய்மையாக இருப்போரையும் நேசிக்கின்றான்

(அல்குர்ஆன் : 2:222)

++++++++++++++++++++

மாதவிடாய் பெண் தீட்டா ?

அநேக மதங்களில் மாதவிடாய் பெண்கள் தீட்டுடையவர்களாக பார்க்கப் படுகின்றனர்

இஸ்லாத்தை பொருத்தவரை மாதவிடாய் பெண்கள் தொழுகை போன்ற வணக்க வழிபாடுகளில் தான் ஈடுபடக் கூடாதே தவிர

அவர்களிடம் உரையாடுவதோ தொடுவதோ மார்க்கத்தில் தடை செய்யப்படவில்லை

———————

297. “எனக்கு மாதவிடாய் ஏற்பட்டிருக்கும்போது நபி(ஸல்) அவர்கள் என்னுடைய மடியில் சாய்ந்து கொண்டு குர்ஆனை ஓதும் வழக்கமுடையவர்களாக இருந்தார்கள்” என ஆயிஷா(ரலி) அறிவித்தார்

————

இறைவனின் ஆற்றலும் நாட்டமும் தான் நமக்கு குழந்தை பாக்கியத்தை தரும் என்ற ஆழமான நம்பிக்கையே முஸ்லிம் தம்பதியர்களுக்கு முக்கியமான நம்பிக்கையாக இருக்க வேண்டும்

குழந்தை இல்லை என்பதற்காக விவாகரத்தை நோக்கி செல்வதோ மலடன் மலடி என்று விமர்சனங்களையோ தம்பதியர்களும் அவர்களின் குடும்பத்தார்களும் ஒருவரை ஒருவர் குற்றம் சுமத்தும் போக்கை கை விட வேண்டும்

காரணம் இறைவனுக்கு நெருக்கமான நபிமார்களில் இப்ராஹீம் ( அலை) ஜகரிய்யா (அலை) போன்றோருக்கு கூட அல்லாஹ் நீண்ட வருடங்களாக குழந்தை பாக்கியத்தை தரவில்லை

அவர்களே தள்ளாத வயதில் தான் குழந்தை பாக்கியம் பெற்றார்கள்

இதை காரணம் காட்டி நபிமார்களோ அல்லது நபித்தோழர்களோ விவாகரத்தை நோக்கி செல்லவில்லை

காரணம் இறைவன் நாடினாலேயன்றி எவரும் குழந்தை பாக்கியம் பெற முடியாது

لِّلَّهِ مُلْكُ السَّمَاوَاتِ وَالْأَرْضِ ۚ يَخْلُقُ مَا يَشَاءُ ۚ يَهَبُ لِمَن يَشَاءُ إِنَاثًا وَيَهَبُ لِمَن يَشَاءُ الذُّكُورَ

அல்லாஹ்வுக்கே வானங்களுடையவும் பூமியுடையவும் ஆட்சி சொந்தமாகும்

ஆகவே தான் விரும்பியவற்றை அவன் படைக்கின்றான்

தான் விரும்புவோருக்குப் பெண் மக்களை அளிக்கிறான்

மற்றும் தான் விரும்புவோருக்கு ஆண் மக்களை அளிக்கின்றான்

(அல்குர்ஆன் : 42:49)

أَوْ يُزَوِّجُهُمْ ذُكْرَانًا وَإِنَاثًا ۖ وَيَجْعَلُ مَن يَشَاءُ عَقِيمًا ۚ إِنَّهُ عَلِيمٌ قَدِيرٌ

அல்லது அவர்களுக்கு அவன் ஆண்மக்களையும், பெண் மக்களையும் சேர்த்துக் கொடுக்கின்றான்

அன்றியும் தான் விரும்பியோரை மலடாகவும் செய்கிறான்

நிச்சயமாக, அவன் மிக அறிந்தவன்; பேராற்றலுடையவன்

(அல்குர்ஆன் : 42:50)

இது போக இறைவன் எந்த ஆடவனின் துணையின்றி நபி ஈஸா ( அலை) அவர்களை தந்தையின்றி படைத்துள்ளான் என்ற ஈமானிய உறுதியையும் பெற வேண்டும்

قَالَ إِنَّمَا أَنَا رَسُولُ رَبِّكِ لِأَهَبَ لَكِ غُلَامًا زَكِيًّا

“நிச்சயமாக நான் உம்முடைய இறைவனின் தூதன்; பரிசுத்தமான புதல்வரை உமக்கு அளிக்க (வந்துள்ளேன்”) என்று கூறினார்

(அல்குர்ஆன் : 19:19)

قَالَتْ أَنَّىٰ يَكُونُ لِي غُلَامٌ وَلَمْ يَمْسَسْنِي بَشَرٌ وَلَمْ أَكُ بَغِيًّا

அதற்கு அவர் (மர்யம்), “எந்த ஆடவனும் என்னைத் தீண்டாமலும், நான் நடத்தை பிசகியவளாக இல்லாதிருக்கும் நிலையிலும் எனக்கு எவ்வாறு புதல்வன் உண்டாக முடியும்?” என்று கூறினார்

(அல்குர்ஆன் : 19:20)

قَالَ كَذَٰلِكِ قَالَ رَبُّكِ هُوَ عَلَيَّ هَيِّنٌ ۖ وَلِنَجْعَلَهُ آيَةً لِّلنَّاسِ وَرَحْمَةً مِّنَّا ۚ وَكَانَ أَمْرًا مَّقْضِيًّا

“அவ்வாறேயாகும்; “இது எனக்கு மிகவும் சுலபமானதே

மனிதர்களுக்கு ஓர் அத்தாட்சியாகவும், நம்மிடமிருந்து ஒரு ரஹ்மத்தாகவும் நாம் அவரை ஆக்குவோம்

இது விதிக்கப்பட்ட விஷயமாகும்” என்று உம் இறைவன் கூறுகிறான்” எனக் கூறினார்


Recommended For You

About the Author: Editor