மைத்திரி மகளின் ஹோட்டல் விவகாரம் -சபையில் விவாதம்!!

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் மகளின் ஹோட்டலுக்கு மதுபான விற்பனைக்கான அனுமதி யாரால் கொடுக்கப்பட்டது என ஐக்கிய தேசிய கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹேஷா விதானகே சபையில் கேள்வி எழுப்பினார்.

பிரதி சபாநாயகர் ஆனதா குமாரசிறி தலைமையில் இன்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்ற நாடாளுமன்ற அமர்வில் புதிய மதுபான சாலைகளுக்கு வழங்கப்படும் அனுமதி தொடர்பாக சபையில் பேசப்பட்டது.

இதன்போது மைத்திரிபால சிறிசேனவின் மகளின் ஹோட்டலுக்கு மதுபான விற்பனைக்கான அனுமதி யாரால் கொடுக்கப்பட்டது என ஹேஷா விதானகே கேள்வி எழுப்பினார்.

மேலும்  போதைப்பொருள் ஒழிப்பில் முதலில் ஜனாதிபதி முன்மாதிரியாக நடந்து கொள்ளவேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார். அதனைவிடுத்து ஐக்கிய தேசிய கட்சி மீது தேர்தலை இலக்காகக்கொண்டு சேறு பூச முற்படக்கூடாது என்றும் அவர் தெரிவித்தார்.


Recommended For You

About the Author: Editor