வவுனியாவில் மோட்டார் சைக்கிள் விபத்து!!

வவுனியா தவசிகுளம் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் இருவர் படுகாயமடைந்து வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கபட்டுள்ளார்.

இன்று (செவ்வாய்க்கிழமை) மாலை தவசிகுளத்திலுருந்து கோவில்குளம் நோக்கி சென்றுகொண்டிருந்த மோட்டார் சைக்கிள் தவசிகுளம் வைரவர் ஆலயத்திற்கு அருகாமையில் சென்றுகொண்டிருந்தபோது வீதியின் அருகே இருந்த மதகுடன் மோதியதிலேயே குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.

விபத்தில் 19 மற்றும் 21 வயதுடைய மகாறம்பைகுளம் மற்றும், கோவில்குளம் பகுதிகளை சேர்ந்த இளைஞர்கள் இருவர் படுகாயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கபட்டுள்ளதுடன் அவரில் ஒருவரின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாக தெரிவிக்கபடுகின்றது.

விபத்து தொடர்பாக வவுனியா போக்குவரத்து போலிசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


Recommended For You

About the Author: Editor