ஜேர்மன் அதிகாரி குழு பச்சிலைப்பள்ளிக்கு பயணம்!

கிளிநொச்சி பச்சிலைப்பள்ளி அரசர்கேணிப்பகுதிக்கு இலங்கைக்கான ஜேர்மன் தூதரக அதிகாரி jorn rohdi தலைமையிலான குழுவினர் இன்று விஜயம் செய்துள்ளனர்.

பச்சிலைப்பள்ளி அரசர்கேணிப்பகுதியில் ஜேர்மன் நாட்டின் நிதியுதவியுடன் டாஸ் நிறுவனத்தினால் முனனெடுக்கப்பட்டு வரும் கண்ணிவெடி அகற்றும் பணிகளை அவர்கள் பார்வையிட்டுள்ளனர்.

கிளிநொச்சி பச்சிலைப்பள்ளி பிரதேச செயலர் பிரிவிற்குட்பட்ட முகமாலை மற்றும் அரசர்கேணி பகுதிகளில் சர்வதேச நிறுவனங்களின் நிதியுதவியுடன் டாஸ் மனித நேயகண்ணி வெடி அகற்றும் நிறுவனத்தினால் நிலக்கண்ணி வெடிகள் அகற்றும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இன்று காலை 11.30 மணிக்கு ஆண்ங்ஊ சென்ற குழுவினர் அப் பகுதிகளின் நிலமைகள் தொடர்பிலும் வெடிபொருட்களை அகற்றும் பணிகளின் போது எதிர்கொள்ளும் சவால்கள் தொடர்பிலும் கேட்டறிந்து கொண்டனர்.

இதேவேளை ஜேர்மன் நாட்டின் நிதியுதவியுடன் அங்குள்ள தனியாருக்கு சொந்தமான விவசாய நிலங்கள் மற்றும் குடியிருப்பு காணிகள் அரச காணிகள் என்பன உள்ளடங்கலாக வெடிபொருட்கள் அடையாளம் காணப்பட்ட பகுதிகளில் நிலக்கண்ணி வெடிகள் அகற்றும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.


Recommended For You

About the Author: Editor