பிக்பொஸ் ரித்விகாவிற்கு குவியும் படவாய்ப்பு!!

பிக்போஸ் நிகழ்ச்சியின் கடந்த சீசனில் பங்கேற்று வெற்றி பெற்ற நடிகை ரித்விகா, தொடர்ந்து படங்களில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

வெற்றி படங்களான மெட்ராஸ், கபாலி, ஒருநாள் கூத்து போன்ற படங்களில் நடித்து புகழ் பெற்றவர் நடிகை ரித்விகா.

இவர் சமீபத்தில் நடைபெற்ற விருது விழாவில் கலந்துகொண்ட போது, அடுத்து நடிக்கவுள்ள படங்களின் விபரங்களை குறிப்பிட்டுள்ளார்.

அவர் அடுத்ததாக நடிகர் விஜய் சேதுபதி, நடிகர் சிபிராஜ் மற்றும் நடிகை அமலாபால் ஆகியோரின் படங்களில் நடிக்கவுள்ளதாக கூறியுள்ளார்.


Recommended For You

About the Author: Editor