யாழில் விவசாயக் கண்காட்சி ஆரம்பம்!

வடக்கு மாகாண விவசாய அமைச்சின் வழிகாட்டலின் கீழ் யாழ்ப்பாணத்தில் விவசாயக் கண்காட்சி ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

திருநெல்வேலியில் அமைந்துள்ள மாவட்ட விவசாயப் பயிற்சி நிலையம் மற்றும் விவசாய ஆராய்ச்சி நிலையம் என்பன இணைந்த வளாகத்தில் இந்த கண்காட்சி இன்று (செவ்வாய்க்கிழமை) ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இன்று முதல் எதிர்வரும் வெள்ளிக்கிழமை வரையில் இடம்பெறவுள்ள இந்த கண்காட்சியை தினமும் காலை 9 மணி முதல் மாலை 5 மணிவரையில் பார்வையிடலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

‘காலநிலை மாற்றத்தை எதிர்கொண்டு நஞ்சற்ற உணவு உற்பத்தியில் தன்னிறைவு நோக்கி’ எனும் தொனிப்பொருளில் இந்த கண்காட்சி இடம்பெறுகிறது.

விவசாயம் சார் திணைக்களங்கள் மற்றும் அமைப்புக்கள் இணைந்து இந்த கண்காட்சியை ஒழுங்கமைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


Recommended For You

About the Author: Editor