1000 ஏக்கரை வளைத்துப்போட்ட தென்னிலங்கையர்!!

கிளிநொச்சி- குஞ்சுப் பரந்தன் பகுதியில் சுமாா் 1000 ஏக்கா் நிலத்தில் தென்னிலங்கையை சோ்ந் த ஒருவா் உப்பளம் அமைத்துவருகின்றார்.

இந் நிலையில், குறித்த உப்பளத்தினால் கிளிநொச் சி மாவட்டத்திற்கு பாாிய பாதிப்பு ஏற்படும் என சமூக ஆர்வலர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

குறிப்பாக குஞ்சுப் பரந்தன், உருத்திரபுரம், பொிய பரந்தன் ஆகிய கிராமங்களில் விவசாயமே பிரதான தொழிலாக காணப்படுகின்ற நிலையில் இந்த உப்பள நடவடிக்கையால், விவசாயம் மிக மோசமாக பாதிக்கப்படும் என்றும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

இதேவேளை தங்களுடைய ஒப்புதல் கோரப்ப டாமல் குஞ்சுப்பரந்தன் கிராம அபிவிருத்தி சங்க தலைவருக்கு

கையூட்டல் வழங்கப்பட்டு எதேச்சாதிகாரமாக இந்த உப்பளம் அமைக்கப்படுவதாகவும் பிரதேசவாசிகள் குற்றம் சுமத்தியுள்ளனர்.

தென்னிலங்கையை சோ்ந்த ஒருவா் அரசியல் செல்வாக்கின் ஊடாக குறித்த நிலப்பரப்பினை தன் வசப்படுத்தியுள்ளதாகவும் அவர்கள் விசனம் வெளியிட்டுள்ளனர்.

இந்நிலையில் பிரதேசவாசிகளின் கோாிக்கைக்கு அமைவாக கரைச்சி பிரதேசசபை தவிசாளா் அருணாச்சலம் வேழமாழிகிதன் குறித்த பகுதிய நோில் சென்று பாா்வையிட்டுள்ளதாக மேலும் தெரிவிக்கப்படுகின்றது.


Recommended For You

About the Author: Editor