புதிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் பதவியேற்பு!

புதிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் மூவர் இன்று பதவிப்பிரமாணம் செய்யவுள்ளனர்.

நாடாளுமன்றம் இன்று (செவ்வாய்க்கிழமை) பிற்பகல் 1 மணிக்கு கூடவுள்ளது. இதன்போதே நாடாளுமன்ற உறுப்பினர்கள் மூவர் பதவிப்பிரமாணம் செய்யவுள்ளனர்.

அதற்கமைய ஏற்கனவே தேசியப் பட்டியல் உறுப்பினர் பதவியிலிருந்து விலகிய ஷாந்த பண்டார இன்று மீண்டும் நாடாளுமன்ற உறுப்பினராக பதவிப்பிரமாணம் செய்யவுள்ளார்.

அதேநேரம், கே.ஹேரத் என்பவரும் இன்று நாடாளுமன்ற உறுப்பினராக பதவியேற்கவுள்ளார்.

இதேவேளை, நாடாளுமன்ற உறுப்பினர் சந்திரசிறி கஜதீர காலமானதால் ஏற்பட்ட பதவி வெற்றிடத்திற்கு மனோஜ் சிறிசேன நியமிக்கப்பட்டுள்ளார். மனோஜ் சிறிசேனவும் இன்று பதவியேற்கவுள்ளார்.

இதேவேளை, நாடாளுமன்றத்தில் இன்று முக்கிய சில பிரேரணைகள் விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.


Recommended For You

About the Author: Editor