விடுதலைப் புலிகளின் கொடிகள் மற்றும் சீரூடைகள் மீட்பு!!

முல்லைத்தீவு – முள்ளிவாய்க்கால் கிழக்கு பகுதியில் இருந்து விடுதலைப் புலிகளின் கொடிகள் மற்றும் சீரூடைகள் என்பன மீட்கப்பட்டுள்ளன.

பொதி செய்யப்பட்டு நிலத்தில் புதைக்கப்பட்டிருந்த நிலையில் இவை மீட்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தனியார் ஒருவர் தமது காணியினை கனரக இயந்திரம் கொண்டு சுத்திகரித்துக் கொண்டிருந்த வேளையில், குறித்த பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டன.

இதனை அடுத்து முல்லைத்தீவு காவற்துறைக்கு தகவல் வழங்கப்பட்டு, அவை மீட்கப்பட்டன.

அங்கிருந்து விடுதலைப்புலிகளின் இரண்டு புலிக்கொடிகளும் மற்றும் இராணுவ சீருடைகள் இரண்டும் இரண்டு தொப்பிகளும் மீட்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

அவற்றில் ஒரு இராணுவ சீருடை சிறுவர் ஒருவரின் அளவிலும் மற்றையது பெரியவர்களின் அளவிலும் காணப்பட்டுள்ளன.

அவற்றை முல்லைத்தீவு காவற்துறையினர் இன்று முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்றில் ஒப்படைக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.


Recommended For You

About the Author: Editor