இலஞ்சம் பெற்ற சிலாப பொலிசார் பணிநீக்கம்

சிலாபம் பொலிஸ் பிரிவின் மோசடி ஒழிப்பு பிரிவின் பொறுப்பதிகாரி, பொலிஸ் சார்ஜன்ட், கான்ஸ்டபிள் ஐவர் மற்றும் பொலிஸ் கான்ஸ்டபிள் சாரதி ஆகியோர் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

சூதாட்ட நிலையத்தின் மீதான சுற்றிவளைப்பில் அங்கு காணப்பட்ட 20 சந்தேக நபர்களில் 9 பேரை மாத்திரம் கைதுசெய்யப்பட்டமை, சூதாட்ட நிலையத்தில் காணப்பட்ட பணம் மற்றும் சந்தே நபர்களிடம் காணப்பட்ட பணம் என்பவற்றை இலஞ்சமாக பெற்றுக்கொண்டமை ஆகிய குற்றச்சாட்டில் இவர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.


Recommended For You

About the Author: ஈழவன்