சபரிமலை ஐயப்பன் நடை திறப்பு

புரட்டாசி மாதத்தையொட்டி கேரளாவில் அமைந்துள்ள பிரசித்து பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவில் நடை திறக்கப்பட்டுள்ளது.

நேற்று (திங்கட்கிழமை) மாலை 5.30 மணிக்கு நடை திறந்து சுவாமி ஐயப்பனுக்கு தீபாராதனை காட்டப்பட்டது. அதன் பிறகு வேறு எந்த பூஜைகளும் நடைபெறவில்லை.

மீண்டும் இன்று செவ்வாய்க்கிழமை அதிகாலை 5.30 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு சுவாமி ஐயப்பனுக்கு நெய் அபிஷேகம் உட்பட விஷேட பூஜைகள் நடத்தப்பட்டன. எதிர்வரும் 21ஆம் திகதி இரவு 10 மணிக்கு அரிவராசனம் பாடப்பட்டு கோவில் நடை சாத்தப்படும் என ஆலய நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர்.

இருமுடி கட்டி சபரிமலை வரும் பக்தர்களுக்கு தேவையான அனைத்து ஏற்பாடுகளையும் திருவிதாங்கூர் தேவசம் சபை செய்துள்ளது.

புரட்டாசி மாதத்தில் சுவாமி ஐயப்பன் கோவிலில் பிரசித்தி பெற்ற படி பூஜை, உதயாஸ்தமன பூஜை உள்பட பல்வேறு பூஜைகள் நடத்தப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

சபரிமலை ஐயப்பன் கோவில் நடைதிறப்பையொட்டி, சபரிமலையில் பொலிஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.


Recommended For You

About the Author: ஈழவன்