தடைகளை கண்டு அஞ்சேன் – நானே வேட்பாளர்

யார் எவ்வாறான தடைகளை ஏற்படுத்தினாலும் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் தான் களமிறங்குவது உறுதி என அமைச்சர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

கட்டுவன பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

இங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், “பல்வேறு சந்தர்ப்பங்களின்போது, நான் ஒரு அடி பின்நோக்கிச் சென்று, ஏனைய நபர்களுக்கு பல விடயங்களில் வாய்ப்புக்களை வழங்கியிருந்தேன்.

இவ்வாறு நான் கடந்த காலங்களில் மிகவும் அமைதியானதொரு அரசியலைத்தான் மேற்கொண்டிருந்தேன். இப்போது, எனக்கான நேரம் வந்துவிட்டது.

எனவே, அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் நிச்சயமாக வேட்பாளராக களமிறங்குவேன் என்பதை நான் இவ்வேளையில் மீண்டும் உறுதியுடன் கூறிக்கொள்கிறேன். சிலர் என்னிடம் கேட்கிறார்கள், மக்கள் பலம் உள்ளதா என்று. நான் இதனை பதுளை, மாத்தளை மற்றும் குருநாகல் பகுதிகளில் இடம்பெற்ற கூட்டங்களின்போது காண்பித்துவிட்டேன்.

இனிமேல் மக்கள் பலத்தை காண்பிக்கவும் நான் தயாராகவே உள்ளேன். நாம் ஏனையவர்களுக்கு பல்வேறு சந்தர்ப்பங்களில் வாய்ப்பளித்துவிட்டோம்.

இந்தநிலையில், யார் எவ்வாறான தடைகளை ஏற்படுத்தினாலும், அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் நான் நிச்சயமாக வேட்பாளராக களமிறங்கி, ஆட்சியமைப்பேன் என்பது உறுதியாகும்” என அவர் மேலும் தெரிவித்தார்


Recommended For You

About the Author: ஈழவன்