அர்ஜூன் மகேந்திரனை நாடு கடத்துவதற்கான ஆவணங்கள் சமர்ப்பிப்பு!!

இலங்கை மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜூன் மகேந்திரனை நாடு கடத்துவதற்கான ஆவணங்கள் சிங்கப்பூர் அரசாங்கத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

குறித்த ஆவணங்களை சிங்கப்பூரில் உள்ள இலங்கை உயர்ஸ்தானியர் அலுவலகத்தினால் சிங்கப்பூர் அரசாங்கத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக சட்டமா அதிபர் திணைக்களம் இன்று (திங்கட்கிழமை) தெரிவித்துள்ளது.

மத்திய வங்கியின் பிணை முறி மோசடி தொடர்பாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ள மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜுன் மகேந்திரனை, நாடு கடத்துவது தொடர்பிலான கோரிக்கைக்கு சிங்கப்பூர் அரசாங்கம் நடவடிக்கை எடுப்பதாக அண்மையில் அறிவித்தது.

உரிய ஆவணங்கள் கிடைக்கப் பெற்ற பின்னர் நாடு கடத்தல் கோரிக்கை தொடர்பில் சிங்கப்பூர், சட்டத்திற்கு அமைய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என, சிங்கப்பூர் வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் கூறியிருந்தார்.

இந்நிலையில் அர்ஜூன மகேந்திரனை இலங்கைக்கு நாடு கடத்துவதற்குத் தேவையான 21,000 பக்கங்களைக் கொண்ட ஆவணத்தை சட்ட மா அதிபர் திணைக்களம் தயார் செய்தது. இதன்பின்னர் குறித்த ஆவணத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கடந்த 6 ஆம் திகதி கையொப்பமிட்டார்.

பின்னர் இந்த ஆவணங்கள், கடந்த வாரம் சிங்கப்பூரில் உள்ள இலங்கை உயர்தானியர் அலுவலகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது குறித்த ஆவணங்கள் சிங்கப்பூர் அரசாங்கத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன


Recommended For You

About the Author: Editor