பிரித்தானியா தீர்வை முன்வைக்கவில்லை ஐரோப்பிய ஆணையம்!!

பிரெக்ஸிற் ஒப்பந்தத்திலுள்ள ஐரிஷ் எல்லைக் கொள்கையை மாற்றியமைப்பதற்கான எந்தவொரு தீர்வையும் பிரித்தானியா முன்வைக்கவில்லையென ஐரோப்பிய ஆணையம் தெரிவித்துள்ளது.

பிரித்தானிய பிரதமர் பொரிஸ் ஜோன்சன் மற்றும் ஐரோப்பிய ஆணையத் தலைவர் ஜோன் கிளோட் ஜங்கர் இடையே இன்று இடம்பெற்ற பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து ஐரோப்பிய ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆனாலும் ஐரோப்பிய ஆணையத் தலைவர் ஜங்கர் இடையேயான பேச்சுவார்த்தை ஆக்கபூர்வமானதாக அமைந்ததாக பிரித்தானிய பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

ஐரிஷ் எல்லைக் கொள்கை ஜனநாயகத்துக்கு விரோதமானது எனவும் பிரெக்ஸிற் ஒப்பந்தத்திலிருந்து அகற்றப்பட வேண்டும் எனவும் பிரதமர் தெரிவித்திருந்தார்.

ஐரிஷ் எல்லைக் கொள்கைக்கான மாற்றீடுகளைப் பற்றி ஆராயத் தயாராக உள்ளதாகவும் ஆனால் இது போன்ற காப்பீட்டுக் கொள்கை கட்டாயமாக ஒப்பந்தத்தில் இடம்பெற வேண்டும் எனவும் ஐரோப்பிய ஒன்றியம் தெரிவித்துள்ளது.

ஐரிஷ் எல்லைக் கொள்கைக்கான மாற்றுத் தீர்வுகளை முன்வைக்க வேண்டியது பிரித்தானியாவின் பொறுப்பு என்பதை இன்றைய சந்திப்பின் போது பிரதமரிடம் ஜூங்கர் நினைவுபடுத்தியதாகவும் இவ்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பிரித்தானியாவில் முன்வைக்கப்படும் இத்தகைய தீர்வுகளை திறந்த மனதுடன் ஆராய்வதற்கு ஐரோப்பிய ஆணையம் தயாராக இருப்பதை ஜங்கர், பிரதமருக்கு உறுதிப்படுத்தியதாகவும் ஆனால் இதுவரை அத்தகைய தீர்வுகள் எதுவும் முன்வைக்கபபடவில்லையென ஐரோப்பிய ஆணையத்தின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Recommended For You

About the Author: Editor