அதிவேக நெடுஞ்சாலையில் கார்கள் மோதி பாரிய விபத்து!

கொழும்பு நகரின் நுழைவு வாயிலான தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் கஹாதுடுவ பகுதியில் 6 கார்கள் ஒன்றோடொன்று மோதி பாரிய விபத்து ஏற்பட்டுள்ளது.

விபத்தில் காயமடைந்த 2 பேர் ஹோமாகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் நாட்டில் சீரற்ற வானிலை நிலவுவதால் அதிவேக நெடுஞ்சாலையில் பயணிக்கும் வாகனங்களை செலுத்தும்போது மிகவும் அவதானமாக பயணிக்குமாறு, வீதி அபிவிருத்தி அதிகார சபை வேண்டுகோள் விடுத்துள்ளது.

அத்துடன் குறித்த வீதியில், அதி வேகமாக வாகனங்களை செலுத்த வேண்டாம் எனவும் மணிக்கு 60 கிலோ மீட்டர் வேகத்தில் பயணிக்குமாறும் வீதி அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.

அதிவேக நெடுஞ்சாலைகளில் பயணிக்கும் போது வாகனங்களின் வேகத்தை குறைத்துக் கொள்ளுமாறு வாகன சாரதிகளுக்கு அறுவுறுத்தப்பட்டுள்ளது.

நாடளாவிய ரீதியில் அடைமழை பெய்து வருவதனால் பாதுகாப்பு கருதி வாகனங்களுக்கு வேகக்கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


Recommended For You

About the Author: Editor