காவல்துறை ஆணையர் சடலமாக மீட்பு! – பெண் துணைவியார் கைது..!!

ஞாயிற்றுக்கிழமை மாலை காவல்துறை ஆணையர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

செப்டம்பர் 15 ஆம் திகதி இச்சம்பவம் Beaumont-sur-Oise (Val d’Oise) நகரில் இடம்பெற்றுள்ளது. குறித்த அதிகாரி தனது துணைவியாரால் துப்பாக்கியால் சுட்டப்பட்டு கொல்லப்பட்டுள்ளார்.

உயிரிழந்த ஆணையர் அதே மாவட்டத்தைச் சேர்ந்த Cergy-Pontoise நகரில் ஆணையராக பணிபுரிந்துவந்தவர் ஆவர். அவனின் பெண் துணைவியார் உடனடியாக கைது செய்யப்பட்டு, கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட துணைவியாரும் ஒரு காவல்துறை அதிகாரி எனவும், சேவைத்துப்பாக்கியை பயன்படுத்தி இந்த துப்பாக்கிச்சூடு இடம்பெற்றதம்தாகவும் அறியமுடிகிறது. Versailles நகர தடவியல் நிபுணர்கள் தடயங்களை சேகரித்து வருகின்றனர். விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.


Recommended For You

About the Author: Editor