18 வயது இளைஞனுக்கு தலையில் துப்பாக்கிச்சூடு…!!

8 வயதுடைய இளைஞன் ஒருவர் மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டுள்ளது. தாக்குதலாளி தப்பிச் சென்றுள்ளார்.

இச்சம்பவம் Nantes நகரில் சனிக்கிழமை நள்ளிரவு இடம்பெற்றுள்ளது. 23:30 மணி அளவில் வீதியில் மகிழுந்தில் இருந்த 18 வயதுடைய இளைஞன் மீது நபர் ஒருவர் துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டுள்ளார்.
இரண்டில் இருந்து மூன்றுவரையான துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டதாகவும், அதில் ஒரு குண்டு குறித்த இளைஞனின் தலையில் பாய்ந்ததாகவும் காவல்துறையினர் தெரிவித்தனர்.
மகிழுந்தில் இரண்டு அல்லது மூன்று துப்பாக்கி குண்டுகள் பாய்ந்திருந்தன.  துப்பாக்கிச்சூட்டுக்குரிய சரியான காரணம் எதுவும் தெரிவிக்கப்படவில்லை. இளைஞன் மீட்கப்பட்டு Nantes நகர பல்கலைக்கழக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Recommended For You

About the Author: Editor