இரு மாணவர்களுக்கு இடையே மோதல்! தடுப்பதற்கு எடுத்த விபரீத முடிவு

அமெரிக்காவில் இரு மாணவர்களுக்கு இடையே ஏற்பட்ட சண்டையைத் தடுப்பதற்கு மற்றொரு மாணவர் எடுத்த முயற்சி விபரீதத்தில் முடிந்துள்ளது.

கலிபோர்னியாவில் உள்ள ஸ்டாக்டன் என்ற இடத்தில் கடற்படைக்கான பள்ளி இயங்கி வருகிறது. இங்கு கடந்த சில தினங்களுக்கு முன் இரு மாணவர்களுக்கு நடுவே கைகலப்பு ஏற்பட்டது.

இவர்களின் சண்டையை சக மாணவர்கள் வேடிக்கை பார்த்த நேரத்தில், சண்டையை நிறுத்தக்கேட்டு மற்றொரு மாணவரான வால்டஸ் சார்மியன்டோ என்பவர் வேகமாக ஓடி வந்து ஒரு மாணவரின் பின்னந்தலையில் மோத சண்டையிட்ட இருவரும் கீழே விழுந்தனர்.

பின்னர் மற்ற மாணவர்கள் இருவரையும் சமாதானம் செய்ய முயன்றனர். அதில் ஒருவர் எழுந்து விட, மற்றொரு மாணவனுக்கு மோசமான காயம் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து மருத்துவமனையில் அந்த மாணவன் அனுமதிக்கப்பட்டுள்ளான். இதுகுறித்து ஸ்டாக்டன் போலீசார் விசாரித்து வருகின்றனர்.


Recommended For You

About the Author: Editor