பிரித்தானிய கொடி ஏந்தி ஹொங்கொங் மக்கள் போராட்டம்!

பிரித்தானிய கொடி ஏந்தியும், அந்நாட்டு தேசிய கீதத்தை பாடியும் ஹாங்காங் மக்கள் பிரிட்டிஷ் தூதரக வாசலில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஹாங்காங்கில் குற்ற வழக்குகளில் சிக்குவோரை சீனாவிற்கு நாடு கடத்தி விசாரிப்பது தொடர்பான மசோதாவிற்கு எதிரான போராட்டங்களால், அந்த மசோதா திரும்பப் பெறப்பட்டது.

இருப்பினும் போராட்டத்தில் கைது செய்தவர்களை நிபந்தனையற்ற விடுவிக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, ஒவ்வொரு வார இறுதி நாட்களிலும் போராட்டம் நடைபெற்று வருகிறது.

அதன்படி இன்று ஹாங்காங்கில் உள்ள பிரிட்டிஸ் தூதரக வாசலில் போராட்டம் நடைபெற்றது. அதில் போராட்டக்காரர்கள் பிரிட்டனின் யூனியன் ஜாக் கொடி ஏந்தியும், God save the queen என்ற பிரிட்டிஸ் தேசிய கீதத்தை பாடியும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பிரிட்டனின் ஆதிக்கத்தில் இருந்த ஹாங்காங், 99 ஆண்டுகால ஒப்பந்தம் முடிந்ததை அடுத்து, 1997 ஆம் ஆண்டு சீனாவிடம் ஒப்படைக்கப்பட்டது. இந்த நிலையில் தற்போது ஹாங்காங்கில் பிரிட்டிஷ் தேசிய கீதத்தை பாடி போராட்டம் நடைபெற்றுள்ளது


Recommended For You

About the Author: Editor